மன்ற நிர்வாகிகள் சந்திப்பு, ஆலோசனை கூட்டங்கள் என்று விஜய் வட்டாரமே பிஸியாக இயங்கிக் கொண்டிருந்தது. பொங்கப் பானையில் பன்னீர் தெளித்த மாதிரி சில நாட்களாக இந்த உற்சாகம் மிஸ்ஸிங். நிலைமை சரியில்லாததால் கட்சி ஆரம்பிப்பதை தள்ளி போட்டிருக்கிறார் தளபதி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இதற்கு நேர்மாறாக உற்சாகத்தில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.
தமிழ்நாடு முழுவதும் அஜித்துக்கு முப்பதாயிரம் ரசிகர் மன்றங்கள் உள்ளன. இவற்றின் முழுமையான விவரங்களை சேகரித்து வருகிறார் அஜித். மேலும், தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றவும் முடிவு செய்திருக்கிறார். மன்ற விஷயங்களில் அக்கறை காட்டாத தல-யின் இந்த திடீர் தீவிரத்தால், அடுத்து அரசியல் கட்சிதான் என்று மகிழ்ந்து போயிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
கட்சி ஆசையில் இருப்பவர்கள் கையில் கடைசியில் கமண்டலத்தை கொடுக்கப் போறாங்க... உஷார்.
No comments:
Post a Comment