சனிக்கிழமை குற்றாலத்தில் நல்ல தட்பவெப்பம் காணப்பட்டது. நேற்று மட்டும் லேசான வெயில் இருந்தது. சனிக்கிழமை மற்றும் ஞாயிறுகிழமைகள் விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் ஏராளமான பயணிகள் படையெடுத்தனர். ஆனால் சுற்றுலா வந்த பயணிகளின் மகிழ்ச்சியைக் கெடுக்கும் வகையில் அருவிகளில் தண்ணீர் மிகக் குறைவாகவே கொட்டியது.
ஐந்தருவியில் மூன்று பிரிவுகளில் தண்ணீர் ஓரளவு கொட்டுகிறது. இங்கு நேற்று ஆண்கள் கூட்டத்தை விட பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.
முக்கிய அருவியில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. புலியருவியில் தண்ணீர் விழவில்லை. பழைய குற்றாலத்திலும் தண்ணீர் குறைவாகவே விழுகிறது. இதனால் குற்றால அருவியில் குளிக்க வந்த பயணிகள் லேசாக உடலை நனைத்துக் கொண்டு சென்றனர்.
No comments:
Post a Comment