விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் வேட்டைக்காரன் அவரது 49வது படம். ஐம்பதாவது படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டிருந்தது. அழகர்மலை படத்தின் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார் சொன்ன கதை விஜய்யின் ஐம்பதாவது படத்துக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தது.
தயாரிப்பாளரும், கதையும் தயாராக இருந்தும் இயக்குனரை முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. பேரரசு முதல் கே.வி.ஆனந்த் வரை பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியாக இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமாருக்கே ஐம்பதாவது படத்தை இயக்கும் வாய்ப்பை விஜய் அளித்திருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
உரிமைக்குரல் என்ற பெயர் படத்துக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. விஜய் ஜோடியாக தமன்னா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாளில் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment