நடிகர் விஜயகுமார்-நடிகை மஞ்சுளா தம்பதியரின் கடைசி மகள் நடிகை ஸ்ரீதேவி. இவருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த பொறியாளர் ராகுலுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி-ராகுல் திருமணம் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீலாடு வெங்கடாசலபதி பேலசில் இன்று காலை நடந்தது.
இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார், பிரபு, சத்யராஜ், பாக்யராஜ் ஆகியோர் நேரில் மணமக்களை வாழ்த்தினர்.
மேலும் தொழில் அதிபர் பழனி பெரியசாமி, ராம்குமார், நடராஜன், நடிகர்கள் தியாகு, சின்னிஜெயந்த், உதயா, வையாபுரி, சந்திரசேகர், நடிகைகள் மீனா, பூர்ணிமா, ஜெயந்தி, வாணிஸ்ரீ, சங்கவி, மகேஸ்வரி, தயாரிப்பாளர் அமுதாதுரைராஜ் உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினர்.
இன்று நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
No comments:
Post a Comment