நாகேந்திர ஹர்ரி. வெளிநாட்டில் வாழும் இந்தியர். இவர் இயக்கிய முதல் படமே சர்வதேச அளவில் கவனத்தை கவர்ந்தது. வேர் ஆர் யூ சோஃபியா என்ற அந்தப் படத்தைத் தொடர்ந்து புதிய படமொன்றை இயக்குகிறார் ஹர்ரி.
ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஜானி டெப், லியோனார்டோ டி காப்ரியோ, ரஸல் குரோ ஆகியோரில் ஒருவர் ஹர்ரியின் புதிய படத்தில் நடிக்கிறார்கள். அதிகமும் ஜானி டெப் நடிப்பார் என்று தெரிகிறது.
இந்தப் படத்தை இந்தியிலும் இயக்க விரும்புகிறார் ஹர்ரி. அதில் நடிக்க அவரது சாய்ஸ் கமல். கமல் நடிக்காவிட்டால் அமீர்கான்.
உன்னைப்போல் ஒருவன் படத்துக்குப் பிறகு மலையாளம், ஆங்கிலம், ஐப்பான் ஆகிய மொழிகளில் தயாராகும் 19 ஸ்டெப்ஸ் படத்தில் கமல் நடிக்கிறார். ஹர்ரியின் ஆசைக்கு செவி சாய்ப்பாரா என்பது இந்தப் படத்துக்குப் பிறகே தெரியவரும்.
No comments:
Post a Comment