மத்திய அமைச்சரவையின் கூட்டம், இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்ஜெட் கூட்டத்தை தொடங்கும் நாள், பட்ஜெட் சமர்ப்பிக்கும் தேதிகள் முடிவு செய்யப்பட்டன.
இதன் படி, மக்களவையில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி 2009-10 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜுலை ஆறாம் தேதி தாக்கல் செய்கிறார்.
முன்னதாக ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, ரயில்வே பட்ஜெட்டை ஜுலை 3 ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.
மக்களவையின் முதல் நாள் கூட்டத்தில் (ஜுலை 2) இந்த நிதி ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
மத்திய பட்ஜெட் ஜுலை 31 ஆம் தேதிக்குள் இரண்டு அவைகளிலும் நிறைவேறிவிடும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
மக்களைக்கு தேர்தல் நடந்ததால், ஜுலை மாதம் வரையிலான செலவினங்களுக்கு, சென்ற நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இப்போது தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஜுலை 31 ஆம் தேதிக்குள் நிறைவேறாவிட்டால், இடைக்கால செலவினங்களான மானிய கோரிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டிதிருக்கும். இந்த சூழ்நிலை ஏற்படாது என்று அரசு நம்பிக்கையுடன் உள்ளது.
No comments:
Post a Comment