நடிகர் சங்க‌த் தலைவ‌ர் பத‌வி‌க்கு சரத்குமார் ‌மீ‌ண்டு‌ம் போ‌ட்டி

நடிகர் சங்கத்தலைவர் பதவிக்கு சரத்குமாரும், பொதுச் செயலர் பதவிக்கு ராதாரவியும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். இருவரும் நடிகர் சங்கத்தில் தேர்தல் அதிகாரி கவிஞர் பிறைசூடன் முன்னிலையில் இ‌ன்று வேட்பு மனுதாக்கல் செய்தனர்.


நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் ஜூலை 12ஆம தேதி தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் ஆகும்.

நடிகர் சங்கத்தலைவர் பதவிக்கு சரத்குமாரும், பொதுச் செயலர் பதவிக்கு ராதாரவியும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். இருவரும் இன்று காலை நடிகர் சங்கத்தில் தேர்தல் அதிகாரி கவிஞர் பிறைசூடன் முன்னிலையில் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

நடிகர் சங்க துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட விஜயகுமார், மனோரமாவு‌ம், பொருளாளர் பதவிக்கு போட்டியிட வாகை சந்திரசேகரும் வேட்பு மனு தாக்கல் செய்தன‌ர்.

நடிகர் சங்க கமிட்டி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட சத்யராஜ், முரளி, எஸ்.வி. சேகர், சின்னி ஜெயந்த், குயிலி, மும்தாஜ், பசி சத்யா, அலெக்ஸ், சத்யபிரியா, கே.என். காளை, மயில்சாமி, கே.ஆர். செல்வ ராஜ், எம். ராஜேந்திரன், ஆர்.வீரமணி, பிரவீன்குமார், சவுண்டப்பன், இசையரசன், ஜெயமணி, சி.ஐ.டி. சகுந்தலா, ஏ.கே. ராஜேந்திரன் ஆகியோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

மனுக்கள் பரிசீலனை நாளை நடக்கிறது. 26ஆ‌ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. நடிகர் சங்கத்தில் மொத்தம் 3 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஓட்டுரிமை உள்ளவர்கள் 2 ஆயிரத்து 636 பேர்.

No comments:

Post a Comment