அ.‌இ.‌அ.‌தி.மு.க.வு‌ட‌ன் இ‌னி எ‌ந்த தொட‌ர்பு‌ம் ‌கிடையாது : எ‌ஸ்.‌வி.சேக‌ர் ‌திடீ‌‌ர் அ‌றி‌வி‌ப்பு

அ.இ.அ.‌தி.மு.க.வு‌க்கு‌ம் என‌க்கு‌ம் இ‌னி எ‌ந்த‌வித தொட‌‌ர்பு‌ம் ‌‌கிடையாது எ‌ன்று ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் எ‌ஸ்.‌வி.சேக‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ச‌ட்ட‌ப்பேரவை வளாக‌த்‌தி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியா‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், அ.இ.அ.தி.மு.க ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் கலைராஜனிடம் இருந்து எனக்கு மிரட்டல் வந்ததை அடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு அவை‌த் தலைவ‌ரிட‌ம் கேட்டேன். அதனை ஏற்று எனது வீட்டில் பாதுகாப்புக்கு காவலர்களை போட்டுள்ளனர்.

இன்று சட்ட‌ப்பேரவை‌க்கு வரும்போது ஆயுதம் ஏந்திய காவலர் ஒருவர் என்னுடன் பாதுகாப்புக்கு வந்தார். அதனை நான் ஏற்றுக்கொண்டேன். தவறானவர்களிடம் இருந்து வந்த தவறான வார்த்தைகளால் தான் இந்த பாதுகாப்பு எனக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நான் கடவுளை நம்புகிறவன். நான் யாருக்கும் எதிரி அல்ல. அதேபோல நான் யாரையும் எதிரியாக கருதவில்லை. இப்போதும் நான் அ.இ.அ.தி.மு.க.வில் தான் உள்ளேன். கட்சியை விட்டு விலகும் எண்ணம் இதுவரை எனக்கு இல்லை. ஆனால் கட்சியின் கூட்டங்களுக்கு எனக்கு எந்த அழைப்பும் அனுப்பப்படுவதில்லை.

இது தொடர்பாக கட்சி தலைமைக்கு இதுவரை 16 கடிதங்களை எழுதியிருக்கிறேன். ஆனால் அதற்கு எந்த பதிலும் கட்சித் தலைமையிடம் இருந்து கிடைக்கவில்லை. அ.இ.அ.தி.மு.க தலைமைக்கு என்னிடம் ஏன் மனக்கசப்பு என்று தெரியவில்லை. ஆனால் என்மீது மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது. இது கண்ணாடியில் விழுந்த விரிசல் போன்றது. இனி ஒட்டாது. அ.இ.அ.‌தி.மு.க.வு‌க்கு‌ம் என‌க்கு‌ம் இ‌னி எ‌ந்த‌வித தொட‌‌ர்பு‌ம் ‌‌கிடையாது.

அடிக்கடி சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே நான் சட்ட‌ப்பேரவைக்கு வருகிறேன். இன்றும் கேள்வி நேரத்தில் பேசினேன்.

பிராமணர்களுக்கு இட ஒதுக்கீட்டை வலியுறுத்தவே அனைத்திந்திய ஆரிய முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்குமாறு எனது நண்பர்களும், ஆதரவாளர்களும் என்னை வலியுறுத்தி வருகின்றனர். அது என் பரிசீலனையில் உள்ளது.

பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளேன். அதனை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். அப்படி அவர் நிறைவேற்றினால் வரும் சட்டமன்ற தேர்தலில் பிராமணர்கள் தி.மு.க கூட்டணிக்குத் தான் வாக்களிப்பார்கள் எ‌ன்று எ‌ஸ்.‌வி.சேக‌ர் கூ‌றினா‌ர்.

No comments:

Post a Comment