எஸ்.எம்.எஸ். மூலம் ரயில்வே பொது விசாரணை

எஸ்.எம்.எஸ். மூலம் ரயில்வே பற்றிய தகவல்களை விசாரித்து அறிந்துக்கொள்ளும் வசதியை இந்திய ரயில்வே தற்போது அறிமுகம் செய்துள்ளது.

இந்திய ரயில்வே துறையின் கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழக நிறுவனம் இந்த வசதியை சமீபத்தில் அறிமுகம் செய்தது. ரயில்வே தொடர்பான தகவல்களை அறிய "139 - Rail Sampark" என்று டைப் செய்து 139 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த சேவை மூலம், ரயில் டிக்கெட்டின் PNR நிலை, கட்டணம், இடம் இருக்கிறதா என்பதை பற்றிய விபரம் போன்ற அனைத்து விபரங்களையும் அறிய முடியும். ரயில் புறப்படும் மற்றும் வந்துசேரும் நேரம் ஆகியவற்றையும் அறிய முடியும்.

உதாரணமாக, ரயில் டிக்கெட்டின் PNR நிலையை அறிய, PNR என டைப் செய்து, பின்னர் 10 இலக்க எண்களையும் டைப் செய்து 139 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்ய வேண்டும்.

இந்த வசதி, நாடு முழுவதிலும் இருந்து லேண்ட்லைன் மற்றும் மொபைல்போன்கள் மூலம் பயன் படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எஸ்.டி.டி கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. ரயில்வே துறையில் இந்த வசதியை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், 139 எண்ணுக்கு நாள்தோறும் நாடு முழுவதும் இருந்தும் சுமார் 7.5 லட்சம் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த எண்ணில் வரும் அழைப்புகளுக்கு, அந்தந்த மொழிகளில் உடனுக்குடன் பதில் அளிக்கும் வகையில் 11 உள்ளூர் மொழிகளுடன் கூடிய விசாரணை மையங்களும் (கால் சென்டர்கள்) இயங்கி வருகின்றன.

இந்த 139 சேவையை பயன்படுத்தி, ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவும் செய்துக்கொள்ள முடியும். இவ்வாறு முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் உடனடியாக பயணிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

No comments:

Post a Comment